சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது விக்ரம்.
இந்தப் படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என அனைத்து நாடுகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்களின் பேராதரவுடன் தற்போது 20 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக கடந்துள்ளது விக்ரம் படம்.
விக்ரம் – ரஞ்சித் இணைவது ஒரு பீரியட் பான் இந்தியா 3D ஃபில்ம் -ஞானவேல் ராஜா
கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஷ்வரி, ஷிவானி, காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து விக்ரம் என்ற படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ். இந்தப் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குளில் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனிக்காட்டு ராஜாவாக விக்ரம்
கடந்த 20 நாட்களில் சொல்லிக் கொள்ளும்படியாக வேறு எந்த நடிகரின் படங்களும் வெளியாகாத நிலையில், தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது விக்ரம் படம். இந்நிலையில் அடுத்த வாரங்களில் மற்ற ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ள சூழலில் விக்ரமின் வசூல்வேட்டை குறையலாம்.
மிரட்டலான மேக்கிங்
படத்தின் மிரட்டலான மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் லோகேஷின் யூனிவர்ஸ் என்ற வகையில், கைதி, விக்ரம் 3 படம் போன்றவற்றையும் இதில் இணைத்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. பகத் பாசில் படத்தில் சிறப்பான மற்றும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார்.
சிறப்பான பகத் பாசில்
இவரது இந்தக் கதாபாத்திரம் பாதி படம் வரை விக்ரம் படத்தை ஆக்கிரமித்திருந்தது. இதனால் தற்போது மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட விக்ரம் படம் முன்னெப்போதும் இல்லாத சிறப்பான கலெக்ஷனை கேரளாவில் பெற்று வருகிறது. தொடர்ந்து அவர் அடுத்த பாகத்திலும் சிறப்பான கேரக்டரை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
திரையுலகின் ஆச்சர்யம்
முன்னதாக படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கமல்ஹா /p>
திரையரங்குகளில் 20 நாட்கள்
இதனிடையே சர்வதேச அளவில் கடந்த 20 நாட்களில் விக்ரம் படம் 380 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. வெளிநாடுகளிலும் தொடர்ந்து 120 கோடிகளை தாண்டி வசூலித்து வருகிறது. ரஜினியின் 2.O படத்தை தொடர்ந்து வெளிநாடுகளில் வசூல்வேட்டையில் இரண்டாவது இடத்தில் உள்ளது விக்ரம்.
விண்ணை முட்டும் சாதனை
தமிழகத்திலும் இந்தப் படம் விண்ணை முட்டும் சாதனையை செய்துள்ளது. தமிழகத்தில் 165 கோடி ரூபாய் வசூலை எட்டி, இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை செய்து முதலிடத்தில் உள்ளது விக்ரம். இந்த வசூல் சாதனையை முறியடிக்கப் போகும் அடுத்தப்படம் குறித்த ஆர்வம் தற்போதே ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
வாரயிறுதி நாட்கள்
தொடர்ந்து வாரயிறுதிகளில் அதிகமான மக்கள் திரையரங்குகளில் படையெடுப்பார்கள். அந்த வகையில் இந்த வாரயிறுதியிலும் அதிகமான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று படத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதனால் இன்னும் சில தினங்களில் படத்தின் வசூல் 400 கோடி ரூபாயை தாண்டும் என்றும் எதிர்பார்க்கலாம்.
Read more about: vikram kamal haasan lokesh kanagaraj ww collections விக்ரம் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் சர்வதேச வசூல்
- 4 Great Tips To Spotting & Hiring An AE (Account Executive)
- "My AE Knows Nuts"
- American and British English: Differences in Grammar
திரையரங்குகளில் வெற்றிகரமாக 20 நாட்களை கடந்த விக்ரம்.. 20 நாட்களில் எவ்ளோ கலெக்ஷன் தெரியுமா? have 82 words, post on tamil.filmibeat.com at June 23, 2022. This is cached page on Movie News. If you want remove this page, please contact us.