சென்னை : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஒரு காலத்தில் டிஆர்பி.,யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்த சீரியல், தற்போது டல் அடிக்கிறது.
இந்த சீரியல் பற்றி எந்த அப்டேட், புதிய தகவல் வந்தாலும், தயவு செய்து இந்த சீரியலை நிறுத்துங்கள். எப்போ தான் சீரியலை முடிப்பீங்க என ரசிகர்கள் கோபமாக கேட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு நிலைமை மோசமாக போய் கொண்டிருக்கிறது.
கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்…இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே?
சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த பல நடிகர், நடிகைகள் இந்த சீரியலில் இருந்து விலகியது, இதனால் கதையின் போக்கு மாற்றப்பட்டது தான் இந்த சீரியலுக்கு மக்களிடம் இருந்த வரவேற்பு குறைய காரணம் என கூறப்படுகிறது.
சீரியலுக்கு குட் பை சொன்ன ரோசினி
சீரியலின் டைட்டில் ரோலான கண்ணம்மா கேரக்டரில் ரோசினி ஹரிபிரியன் நடித்து வந்தார். பெரிய கண்ணை உருட்டி இவர் நடிப்பது, கண்ணம்மா கேரக்டராகவே அனைவரின் மனதிலும் பதிய வைத்து விட்டது. சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கையில் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ரோசினி, சினிமா வாய்ப்பு கிடைத்ததால் தான் அவர் சீரியலுக்கு குட் பை சொல்லி விட்டார்கள் என்றார்கள்.
குக் வித் கோமாளிக்கு வந்த ரோசினி
ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோசினி, இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோஷுட் மட்டுமே பதிவிட்டு வந்தார். திடீரென விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். இவர் எதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் என இதுவரை தெரியவில்லை.
புதிய கண்ணம்மாவான வினுஷா
இந்த நிலையில் புதிய கண்ணம்மாவாக வினுஷா என்ட்ரி கொடுத்தார். இவரை தற்போது வரை ரசிகர்கள் கண்ணம்மாவாக ஏற்கவில்லை என்பதே உண்மை. ரோசினி விலகியதால் சரிந்த சீரியலின் டிஆர்பி.,யை வில்லியான வெண்பா ரோலை வைத்து உயர்த்த அவரை வைத்து சில நாட்கள் ஓட்டினர். ஆனால் வெண்பா ரோலில் நடிக்கும் ஃபரீனா ஆசாத், நிஜத்தில் கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக பிரேக் எடுத்தார். இதனால் இனி இவர் நடிக்க மாட்டார். வில்லியையும் மாற்ற போகிறார்கள் என்றார்கள்.
ஃபரீனா தந்த உறுதி
ஏற்கனவே சீரியலில் நடித்த கண்மணி மனோகரன், அகில், ரோசினி உள்ளிட்ட பலரும் சீரியலில் மாற்றப்பட்ட நிலையில் இவரையும் மாற்ற போகிறார்களா என ரசிகர்கள் கடுப்பாகினர். ஆனால் பாரதி கண்ணம்மாவில் தானே வெண்பாவாக தொடர உள்ளதாக ஃபரீனா விளக்கம் அளித்தார். ஆனால் அவர் சீரியலுக்கு திரும்பி வந்த பிறகு கதையின் போக்கு எப்படி எப்படியோ மாற்றப்பட்டதால் செம போர் அடிக்க துவங்கியது.
கதையே மாறிப் போச்சு
வெண்பா, பாரதியை திருமணம் செய்ய முயற்சிக் கொண்டிருப்பதாக காட்டி வந்தவர்கள் தற்போது வெண்பாவிற்கு அவரின் அம்மா ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அவர் வீட்டிலேயே தங்கி லவ் டார்ச்சர் கொடுப்பதாகவும் காட்டுகிறார்கள். பாரதியும்ல வெண்பாவை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என ஓப்பனாக சொல்லி விட்டார். பாரதியின் டைவர்ஸ் விவகாரம் தெரிந்து குழந்தை ஹேமா கேள்வி கேட்டு வருகிறார். உண்மை தெரிந்த மற்றொரு குழந்தையான லட்சுமி, கவலையில் இருக்கிறார்.
வெண்பாவும் விலகுகிறாரா
இந்த சமயத்தில் வெண்பா ரோலில் நடிக்கும் ஃபரீனா ஆசாத் தனது கணவருடன் விரைவில், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை ஷோவில் எனட்ரி கொடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ஃபரீனா விலகுகிறாரா, இனி யார் வெண்பா ரோலில் நடிப்பார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதே சமயம் யார் நடித்தால் என்ன, யார் விலகினால் என்ன எப்படியும் இந்த சீரியலை பார்க்க போவதில்லை என காய்த்து வருகின்றனர்.
Read more about: bharathi kannamma farina azad mr and mrs chinnathirai பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்
- Kerala lottery result declared: Akshaya AK-461 winners announced
- Le Mans test day: Full entry list
- Lounge around in soft Aerie leggings while they're 30% off
- Las mejores cámaras DSLR para principiantes del 2019: 10 cámaras DSLR económicas perfectas para usuarios nuevos
- Prenda can’t find that darned “Salt Marsh” signature
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுகிறாரா வில்லி வெண்பா?...என்ன பிரச்சனை ? have 145 words, post on tamil.filmibeat.com at June 25, 2022. This is cached page on Movie News. If you want remove this page, please contact us.