மும்பை : பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்த தாகத் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு, படம் பெற்றிருக்கும் லாபம் ஆகியன பாலிவுட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பிய படங்களில் தாகத் படமும் ஒன்று. கங்கனா ரணாவத் ஆக்ஷன் ரோலில் நீடித்திருத்த இந்த படம் மே 20 ம் தேதி ரிலீசானது. ரஸ்னீஸ் காய் இயக்கத்தில் கிட்டத்தட்ட 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
இந்திரா காந்தியாக நடிக்கப் போறாராம் கங்கனா ரனாவத்.. உடைச்சதே போதும் என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இந்தியாவிலேயே மோசமான வருமானம்
ஆனால் கடந்த 2 மாதங்களில் மிக மோசமான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை இந்த படம் பார்த்துள்ளது. மொத்தமாக ரூ.3 கோடிகளை கூட இந்த படம் பெறவில்லை. இந்திய சினிமாவிலேயே மிக மோசமான வருமானத்தை பெற்ற படம் இது தான் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் தான் ஒரு நாளில் இந்தியா முழுவதுமே மொத்தம் 11 டிக்கெட்கள் தான் தாகத் படத்திற்கு விற்பனையானது என்ற தகவல் வெளியானது.
ப்ரொமோஷன் செலவு கூட கிடைக்கல
ப்ரொமோஷனுக்காக செலவிடப்பட்ட தொகையில் 10 சதவீதத்தை கூட இந்த படம் வருமானத்தில் பெறவில்லை என்பது பரிதாபத்திற்குரிய தகவல். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் 85 கோடி செலவழித்ததில், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து விநியோக பங்காக பெற்ற தொகை வெறும் ரூ.2 கோடி மட்டுமே.
இது கூட நல்லதுக்கு தான்
தாகத் படத்தின் சாட்டிலைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் இதுவரை விற்பனையாகவில்லை. வாங்குவதற்கு ஆளில்லாமல் முடங்கி கிடக்கிறது. ஆனால் தயாரிப்பு தரப்பில் கூறுகையில், இவைகள் விற்பனையாகாமல் இருந்தது நன்மைக்கு தான். இல்லாவிட்டால் அந்த நஷ்டமும் சேர்ந்து, கழுத்திற்கு கத்தியாக அமைந்திருக்கும் என சொல்லி நொந்து கொள்கிறார்கள்.
ரூ.78 கோடி நஷ்டம்
இவ்வளவு தான் மொத்த வசூலா
இந்தியாவில் மட்டும் இந்த படம் வசூல் செய்திருக்கும் தொகை ரூ.2.58 கோடி. விநியோக பங்காக ரூ.1.16 கோடியும், வெளிநாட்டு வருமானமாக 70 லட்சமும், வெளிநாட்டு விநியோக பங்காக ரூ.32 லட்சமும், சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம், இசை உரிமம் என மொத்தமாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது.
தொடர்ந்து அடிவாங்கும் பாலிவுட் படங்கள்
சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் ப்ருத்விராஜ் படமும் மிக மோசமான வருமானத்தை பெற்று, பாக்ஸ் ஆபீசில் அடி வாங்கியது. தற்போது கங்கனாவின் படமும் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. பாலிவுட் டாப் நடிகர்கள் நடித்த படங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய தோல்வியை சந்தித்து வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Read more about: kangana ranaut dhaakad கங்கனா ரணாவத் தாகத்
- Bihar govt order to ensure ration to AES-hit families
- Gear Test: AE Light XENIDE AE X15
- The Best Full-Frame Cameras for 2019
- The Best DSLR and Mirrorless Camera Lenses of 2018
- What Parents Should Know About Infections and Mental Health
கங்கனா ரணாவத்தின் தாகத் படம் ரூ.78 கோடி நஷ்டம்...இப்படியா ஆகனும் இவர் நிலைமை have 136 words, post on tamil.filmibeat.com at June 16, 2022. This is cached page on Movie News. If you want remove this page, please contact us.