• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Movie News

Movie & Entertainment Breaking News

  • Home
  • News
  • TV
  • Film
  • Movie
  • Award
  • Festivals

படத்தை பார்த்து ரஜினி சொல்லட்டும்… சமூகவிரோதி யார் என்பதை , எஸ்.எஸ்.ராஜ் பேட்டி

May 24, 2022 by tamil.filmibeat.com

For Quick Alerts
Subscribe Now
தி கிரே மேன் டிரைலர் வெளியானது!

View Sample

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS

For Daily Alerts

Must Watch

முகப்பு

bredcrumb

பேட்டியில்

Interview
| Updated: Tuesday, May 24, 2022, 22:58 [IST]

சென்னை: முத்துநகர் படுகொலை படத்திற்கு திருமாவளவன் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளார் என்றும், ஆளுங்கட்சிக்கு எதிரான படம் இல்லை என்பதை புரிந்து கொண்டு திமுகவினரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்ஸ் ஓடிடி மற்றும் விமியோ தளங்களில் பல போராட்டங்களுக்கு பிறகு ரீலீஸ் ஆகி உள்ள படம் முத்துநகர் படு கொலை.

இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுத்தாச்சு., கல்விக்கேற்ப வேலை வாய்ப்பும் கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன பிரச்சனை..? என்று அரசியல் தலைவர்கள் நினைப்பதாக கூறும் எஸ்.எஸ்.ராஜ் நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

 கேமராவில் கமல் எப்படி அத்தனை கட்டுமஸ்தாகத் தெரிகிறார் - பெர்சனல் டிரெயினர் பகிரும் சீக்ரெட் கேமராவில் கமல் எப்படி அத்தனை கட்டுமஸ்தாகத் தெரிகிறார் – பெர்சனல் டிரெயினர் பகிரும் சீக்ரெட்

ஜாலியன் வாலாபாக் படுகொலை

கேள்வி: முத்துநகர் படுகொலை என்ற படத்தை ஏன் உருவாக்கினீர்கள்?

பதில்: மெரீனாபுரட்சி படத்தை 2019ம் ஆண்டு சென்சாரில் அனுமதி வாங்கி தியேட்டரில் வெளியிட்டோம். 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது, அந்த சம்பவத்தை திரைப்படமாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவாகியது. ஏனென்றால் இது இந்தியாவில் நடந்த இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலையாகும். மேலும் இதில் அரசும், அரசு நிர்வாக அமைப்பும் அமைதியாக இருக்கிறது. யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. நீதி விசாரணை என்ற பெயரில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நீதி வேண்டும் என்பதற்காக தான் இப்படத்தை உருவாக்கினேன் என்றார்.

சுடுகாட்டில் வைத்து படப்பிடிப்பு

கேள்வி: நீங்கள் படப்பிடிப்பை ரகசியமாக நடத்த என்ன காரணம்?

பதில்: இந்த படத்தை தொடங்குவதற்கான பூர்வாங்கமான வேலைகள் 2020ம் ஆண்டு தொடங்கினேன். படப்பிடிப்புகள் அனைத்தும் ரகசியமாக செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களையும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த முக்கிய உறுப்பினர்களையும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்களை யாராவது பார்க்க சென்றால் கூட, எ/p>

போலீசார் தடுத்தனர்

கேள்வி: படத்தை வெளியிட ஒடிடி தளத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

பதில்: முதலில் முத்துநகர் படுகொலை என்ற திரைப்படத்தை யூடியூப் சேனலில் வெளியிட தான் முடிவு செய்தோம். ஆனால் போலீசார் யூடியூப்புக்கு கடிதம் அனுப்பி அதை நீக்கி விடுவார்கள். அதனால் தான் தற்போது TAMILSOTT, VIMEO போன்ற ஒடிடி தளங்கள் மூலம் படத்தை மே 20ம் தேதி வெளியிட்டுள்ளோம்.

கேள்வி: அரசியல் தலைவர்கள் யாருக்கெல்லாம் படத்தை போட்டு காட்டியுள்ளீர்கள்?

பதில்: படப்பிடிப்பு சமயத்தில் மட்டுமல்ல, படத்தை தனிப்பட்ட முறையில் பல தலைவர்களுக்கு போட்டு காண்பிக்கும்போது கூட உளவுத்துறை போலீசார் தடுத்தனர். முதலில் எங்களுக்கு படத்தை போட்டு காட்டுங்கள். பின்னர் மற்றவர்களுக்கு காட்டுங்கள் என்று கூறினர். குறிப்பாக சென்னையில் திருமாவளவன், முத்தரசன் ஆகியோருக்கு படத்தை போட்டு காண்பிக்கும்போது போலீசார் தடுத்தனர். தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனுக்கு படத்தை போட்டு காண்பிக்கும்போது, 5 உளவுத்துறை போலீசார் படத்தை பார்க்க வந்திருந்தனர். அவர்களிடம் மே.20ம் தேதி தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவரும், அப்பொழுது நீங்கள் பாருங்கள், இப்போது நீங்கள் கிளம்புங்கள் என்று கூறினேன்.

13 பேரின் உயிர்

கேள்வி: படத்தை மே 20ம் தேதி வெளியிட என்ன காரணம்?

பதில்: மே 22ம் தேதி தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. ஆகவே அதற்கு முன்பாக படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மே 20ம் தேதி படத்தை வெளியிட்டோம். இந்த படத்தை வெளியிடுவதன் நோக்கம் என்னவென்றால், 13 பேரின் உயிர் கொடூரமாக பறிக்கப்பட்டது. 106 பேர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வலிகளை நாம் உணர வேண்டும். நாம் எல்லோரும் ஒன்று சே./p>

இன்று போய் நாளை வா

இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுத்தாச்சு., கல்விக்கேற்ப வேலை வாய்ப்பும் கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன பிரச்சனை.. ? என்று அரசியல் தலைவர்கள் நினைக்கின்றனர். ஒரு பிரச்சனை என்றால், அதை தூக்கி கிணற்றில் போடு என்பது போல் தான் அரசியல்வாதிகள் உருவாக்கும் விசாரணை கமிஷன். குறிப்பாக சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் போன்றவையாகும். போன ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து எந்தவித விசாரணையும் சரியாக நடைபெறவில்லை. ஆனால் திமுக ஆட்சியில், விசாரணை கமிஷன் அறிக்கையை அளிப்பதற்கு கொடுத்துள்ள கடைசி தேதி மே 22 ஆகும். அவ்வாறு அருணா ஜெகதீசன் அளிக்கும் அறிக்கையில் என்ன இருக்கிறது. அரசு வெளியிடுமா? போலீஸ்காரர்கள், வருவாய்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சிபாரிசு செய்யப்படுமா? என்பதே தூத்துக்குடி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு இதை வெளியிடவில்லை என்றால் இன்று போய் நாளை வா… என்று மட்டுமே அர்த்தம்.

சட்டத்தின் அடிப்படை

கேள்வி: உங்களை யாராவது மிரட்டினார்களா?

பதில் : இப்படத்தை முதன்முதலில் திருநெல்வேலியில் சில நண்பர்களுக்கு போட்டு காண்பித்தேன். அப்போது ஸ்டெர்லைட் கம்பெனி என் மீது திருநெல்வேலி எஸ்.பி.யிடம் புகார் அளித்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மத்திய காவல்நிலையம் எனக்கு சம்மன் அனுப்பியது. அதில் 2 நாட்களில் ஆதாரங்களுடன் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில் படைப்பாளி ஒருவருக்கு இது போன்ற சம்மன் வருவது என்பது வேடிக்கையாக இருந்தது. அப்போது இந்த படம் டெல்லி பிலிம்ஸ் விழாவில் தேர்ந்தெடுக்கப்./p>

இடுப்புக்கு கீழே தான் சுட வேண்டும்.

கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரமா? போராட்டமா?

பதில்: ஆங்கில ஊடகங்களும், பாஜக.வின் ஆதரவு ஊடகங்களும் இந்த போராட்டத்தை கலவரம் என்று கூறியது. ஆனால் உண்மையில் கலவரமல்ல. போராட்டம் தான். போராட்டம் எப்படி கலவரமானது என்பதை தான் படத்தில் காட்டியுள்ளேன். காஷ்மீர், இஸ்ரேலில் மொசார்ட், ஈரானில் அமெரிக்கா பயன்படுத்திய ஸ்னைப்பர் புல்லட்டை போராட்டத்தின் போது தமிழக போலீசார் பயன்படுத்தினர். போலீசாருக்கு 0.303 ரைபிள் பயன்படுத்த மட்டுமே, போலீஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 8 முறைகளை பின்பற்றி பிறகு தான் பயன்படுத்த வேண்டும். மேலும் இடுப்புக்கு கீழே தான் சுட வேண்டும். ஆனால் இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் போலீஸ்காரர்களின் திட்டமே படுகொலை தான். இன்னும் சொல்லப்போனால் இன்றும் கூட ஸ்டெர்லைட்டில் 50 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறுகின்றனர் என்று இயக்குநர் ராஜ் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஒருத்தனாக பேசுவது

கேள்வி: படத்தில் நீங்கள் கொடுத்துள்ள வாய்ஸ் ஓவர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: டாக்குமெண்ட்ரி என்றால் அலட்சியமாக நாம் எல்லோரும் நினைக்கிறோம்.

சினிமாவை விட விறுவிறுப்பாக டாக்குமெண்டரியில் கருத்துக்களை சொல்லலாம். முத்துநகர் படுகொலை படமானது, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை சொல்லக்கூடிய ஆவணப்படமாக இருந்தாலும், பல கோடி மக்களை பார்க்க வைத்து, தவறு செய்தவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப தூண்டுகோலாக இருக்கும். நான் கொடுத்த வாய்ஸ் ஓவர் குறித்து ஒரு சிலர் கூறுகையில், பாதிக்கப்பட்ட ஒருத்தனாக பேசுவது போல் இ/p>

ஆதரவு தருவார்கள்

கேள்வி: அரசியல் தலைவர்களில் யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள்?

பதில்: திருமாவளவன், முத்தரசன் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர். திமுகவின் முன்னணி தலைவர்கள் படத்தை பார்ப்பதற்கு இப்பபோதைக்கு நேரம் இல்லை என்று தான் தெரிகிறது . அதிமுக, பாஜக.,வினரை நான் அணுகவில்லை. எஸ்டிபிஐ கட்சியினர் உதவி செய்தார்கள். இப்படம் ஆளுங்கட்சிக்கு எதிரான படம் அல்ல. இதை புரிந்து கொண்டு திமுகவினர் படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது என்றார் இயக்குநர் ராஜ்.

அனைத்தும் எங்களுடைய உழைப்பு

கேள்வி: முதல்வர் பழனிச்சாமி குறித்து Footageஐ எப்படி பெற்றீர்கள்?

பதில்: எந்தவொரு நியூஸ் சேனலிடம் நாங்கள் Footage ஐ வாங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இரண்டு முன்னணி நியூஸ் சேனல் எங்களிடம் கூறியது என்னவென்றால், நாங்களும் தூத்துக்குடிக்காரர்கள் தான். ஸ்டெர்லைட் எங்களுக்கு நம்பிக்கையான பார்ட்னர். ஆகவே Footage அனைத்தும் எங்களுடைய உழைப்பு தான். எடப்பாடி பழனிச்சாமி முதலில் கலவரம் குறித்து கூறுகையில், நான் டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார். பின்பு 2 நாள் கழித்து சட்டசபையில், கண்ணீர் புகை வாகனத்தை வைத்து தடுத்தோம். பின்னர் தான் துப்பாக்கி சூடு நடத்தினோம் என்றார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கலவரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.

ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டுங்கள்

கேள்வி: நீங்கள் இந்த படத்தை யார் பார்க்க வேண்டும் என்று ஆசைப்ப

பதில்: போராட்டத்தை கலவரம் என்று சித்தரித்தது இரண்டு பேர். ஒருவர் பாஜக.,வின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா. 99 நாள் அமைதியாக நடந்த போராட்டம் 100 வது நாளில் கலவரமாக மாறியதற்கு காரணம் கிறிஸ்தவ கைக்கூலிகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் என்றார். அவர்கள் தான் பணம் கொடுத்தார்கள் என்றும் கூறினார். அது பொய் என்பதை ஆதாரத்துடன் படத்தில் காட்டியுள்ளோம். இன்னொருவர் படத்தின் புரோமோஷனுக்காக வந்த ரஜினிகாந்த் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்றார். இப்படத்தை தூத்துக்குடி மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் போட்டு காண்பித்தபோது, தயவு செய்து இந்த படத்தை ரஜினிகாந்துக்கு போட்டுக்காட்டுங்கள். படத்தை பார்த்து விட்டு அவர் சொல்லட்டும். யார் சமூக விரோதிகள் என்று… இது 13 உயிர்களை பறிகொடுத்தவர்களின் கோரிக்கை என்றார் படத்தின் இயக்குநர் ராஜ்.

தேர்வு செய்யப்பட்ட ஒரே படம்

கேள்வி: உங்களது ஆசை என்ன?

பதில்: என்னை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதி விரைவாக கிடைக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, அது வெளியே தெரியாமல் இருப்பதற்காக வாட்ஸ்அப், இன்டர்நெட் போன்றவற்றை துண்டித்தனர். ஆனால் இன்று உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளோம் என்பதை பெருமையாக நான் கருதுகிறேன் என்றார்.

கேள்வி: முத்துநகர் படுகொலை படத்திற்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளது?

பதில்: சிங்கப்பூரில் நடைபெற்ற World Film Carnival ல் விருது கிடைத்துள்ளது. மேலும் பிரேசிலில் நடைபெற்ற International Film Festival of Environmental and Human Right 30th ECOCINE விழாவில் கலந்து கொண்டு 21713 படங்களில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் “முத்துநகர் படுகொலை” தான். டெல்லியில் நடைபெற்ற 12th Dada Saheb Phalke Film Festival -22 விழாவிலும் Best Documentary Jury என்ற விருதையும் பெற்றுள்ளது என்றார்.

இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Ei_xiFSb2xU இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

Comments

MORE RAJINIKANTH NEWS

  • ரஜினியுடன் இளையராஜா திடீர் சந்திப்பு..ஆர்வத்தில் ரசிகர்கள்..எல்லாம் இதற்காகத்தானா?
  • ” முதல்வன் ” படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான்.. பிரபல நடிகர் ஓபன் டாக்
  • டான் பார்த்துட்டு ரஜினி என்ன சொன்னாரு…ரஜினி ஸ்டைலில் பேசி காட்டிய சிபி சக்கரவர்த்தி
  • அப்போ அந்த மூக்குத்தி அம்மன் தங்கச்சி கேரக்டர்.. ஆர்ஜே பாலாஜியை பந்தாடும் ரஜினி ரசிகர்கள்!
  • Thalaivar 170 …படத்தின் இயக்குநர் இவரா?….ரசிகர்களின் ஆவலை கிளப்பும் தகவல்
  • ரஜினிக்கும், கமலுக்கும் இதுதான் வித்தியாசம்… இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என கூறியுள்ளார் தெரியுமா!
  • இந்தியாவிலேயே இதுதான் அதிகம்.. உச்சத்துக்கு எகிறிய ரஜினிகாந்த் சம்பளம்.. பரபரக்கும் தகவல்!
  • ரஜினிகாந்த் படங்களில் பெண்களை தப்பா காட்டி இருக்காங்க…என்ன இப்படி சொல்லிட்டாரு ஆர்.ஜே.பாலாஜி!
  • வசூல் முக்கியமில்லை.. பாராட்டுற மாதிரி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி, வி
  • டான் படம் பார்த்து விட்டு கண்ணீர் விட்டாரா ரஜினி…சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய தகவல்
  • அப்படி போடு…கொல மாஸா வந்த தலைவர் 169 அப்டேட் …எப்போ ரிலீஸ் தெரியுமா?
  • விக்ரம் ஆடியோ விழாவிற்கு விஜய் வருவாரா? மாட்டாரா?… வாழ்த்து மட்டும் அனுப்பினாரா?

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed

Read more about: rajinikanth director ss raj muthunagar padukolai movie ott ரஜினிகாந்த் இயக்குனர் எஸ் எஸ் ராஜ் முத்துநகர் படுகொலை திரைப்படம் ஓடிடி

English summary
Let Rajinikanth Decide who is Anti-Socialist Says SS Raj in Exclusive Interview

  • It's Time We Talked About Dragon Ball AF's Legacy
  • Review: “The Only Child” by Mi-ae Seo has many flaws
  • In a first, IBC process ordered for failing to pay an insolvency services company
  • Nikon D780 review: Even the best DSLR is still a DSLR
  • Olympus OM-D E-M1 Mark III Hands-on: Making Impossible Shots Easy
  • Samsung Galaxy S10 phones get price cut after Galaxy S20 US release announcement
  • The best Canon cameras for 2020
படத்தை பார்த்து ரஜினி சொல்லட்டும்... சமூகவிரோதி யார் என்பதை , எஸ்.எஸ்.ராஜ் பேட்டி have 169 words, post on tamil.filmibeat.com at May 24, 2022. This is cached page on Movie News. If you want remove this page, please contact us.

Filed Under: Movie rajinikanth, actor rajinikanth, director ss raj, muthunagar padukolai movie, OTT and vimeo platforms, director ss raj exclusive interview, Let Rajinikanth...

Primary Sidebar

RSS Recent Stories

  • John Hinckley Jr. Tells ‘CBS Mornings’ No Concerts Planned; Apologizes To Jodie Foster, Shooting Victims’ Families
  • Howard Stern V. Supreme Court: Radio Jock Says He Might Run For President Following Roe Overturn
  • BBC Unveils Documentary Slate At Sheffield Doc Fest Including Shows On Alzheimer’s & Alcoholics Anonymous
  • Cara Santana Joins Annette Haywood-Carter’s Indie ‘Daughter Of The Bride’; Asif Akbar’s Spy Thriller ‘MR-9’ Adds James Moses Black
  • ‘True Detective’: Kali Reis Joins Jodie Foster In Season 4 As It Gets HBO Greenlight
  • ‘Beyond Salem’: Peacock Drops Official Trailer For Chapter 2
  • Front Row Acquires MENA Rights For Saudi Desert-Set Action Thriller ‘Route 10’
  • Roku Channel Adds Eight NBCUniversal Local Stations In A First For The Streaming Platform
  • Eric Dane Joins KJ Apa In Motorcycle Racing Pic ‘One Fast Move’
  • CAA Completes Acquisition Of ICM Partners

Sponsored Links

  • How American stocks could continue to climb
  • Which is The Economist’s country of the year for 2021?
  • After a shocker in 2021, where might inflation go in 2022?
  • The hidden costs of cutting Russia off from SWIFT
  • Has the pandemic shown inflation to be a fiscal phenomenon?
Copyright © 2022 Movie News. Power by Wordpress.
Home - About Us - Contact Us - Disclaimers - DMCA - Privacy Policy - Submit your story