சென்னை: ஊர்களின் பெயர்களில் டைட்டில்களை வைத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு
திருப்பாச்சி, சிவகாசி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியவர்
மீண்டும் விஜய்யுடன் இணைய காத்துக்கொண்டிருக்கும் பேரரசு நான் விஜய்யை ஆயுதமாக அடுத்த படத்தில் பயன்படுத்துவேன் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் கூறியுள்ளார்.
ஷேவ் பண்ண சர்தாரை பார்த்து இருக்கீங்களா? தீபாவளிக்கு ஏகே61 படத்தோட செம கிளாஷ் இருக்கு!
ஊர்களின் பெயர்களை டைட்டிலாக
கமர்சியல் படங்களை இயக்கினாலும் மற்ற இயக்குநர்களின் சிந்தனையில் இருந்து சற்று விலகி படங்களின் டைட்டில்களை பார்த்த உடனேயே அனைவருக்கும் பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஊர்களின் பெயர்களை படத்தின் டைட்டிலாக வைத்து பிரபலமடைந்த இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். திருப்பாச்சி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விஜய் மற்றும் திரிஷாவின் நடிப்பில் பக்காவான கிராமத்து கதையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆக்சன் மற்றும் காமெடி என இரண்டிலும் கலக்கியிருப்பார். திருப்பாச்சி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பேரரசு சிவகாசி படத்தை இயக்கினார் இந்த முறை முழுக்க முழுக்க சிட்டி பேசில் உருவாக்கியிருந்த சிவகாசி திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று இந்தப்படமும் வசூலை அள்ளியது
மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைய
இவ்வாறு அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்த பேரரசு அடுத்ததாக மூன்றாவது முறையாகவும் விஜய்யுடன் இணைய பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு உள்ளார். கடைசியாக வெளியான படங்கள் சரியாக ஓடாததால் சரியான கம்பேக் கொடுக்க காத்துக் கொண்டு உள்ளார். அதற்காக நடிகர் விஜய்யை பலமுறை சந்தித்து கதையும் கூறி வந்ததாக கூறப்படுகிறது
மாஸான கதையை
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இயக்குநர் பேரரசு கூறியுள்ளதாவது நானும் விஜய்யும் மிக விரைவிலேயே புதிய படத்தில் இணைவது உறுதி. ஆனால் அந்த படம் கட்டாயமாக திருப்பாச்சி, சிவகாசி போல இருக்காது. பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் அரிவாளும் கையுமாக ஒரு மாஸான கதையைத்தான் இயக்குவேன். நான் ஏற்கனவே சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போய் விட்டது.
விஜய்யை ஆயுதமாக பயன்படுத்துவேன்
இப்பொழுது அவருடைய கால்ஷிட்டிற்காக காத்துக்கொண்டு உள்ளேன். சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை சாதாரண மனிதன் சொல்வதற்கும் விஜய் போன்ற உச்ச நடிகர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. விஜய் போன்ற நடிகர்கள் சொன்னால் அது மிகப் பெரிய அளவில் ரீச் ஆகும் எனவே என்னுடைய அடுத்தப் படத்தில் விஜய்யை ஆயுதமாக பயன்படுத்த உள்ளேன் என இயக்குநர் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
Read more about: vijay director perarasu kollywood நடிகர் விஜய் இயக்குனர் பேரரசு கோலிவுட்
- AE Solar's NFC chip innovation prevents solar panel piracy
- Grimes shares an adorable video of Elon Musk holding their newborn baby X AE A-12
- Gigabyte Supports First-Gen Ryzen AF CPUs On X570 Motherboards
- Disney+: Her er alt du skal vide
- Racing Life after F1: Giancarlo Fisichella
நான் விஜய்யை ஆயுதமா பயன்படுத்துவேன்.. இயக்குனர் பேரரசு சபதம்! have 103 words, post on tamil.filmibeat.com at May 24, 2022. This is cached page on Movie News. If you want remove this page, please contact us.