சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வரும் நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார்
மாஸ்டர் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் விஸ்வரூபம் வெளியாகும் போது ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹெச். வினோத் கொண்டாடப்படுவார்னு முன்னாடியே தெரியும்… நடிகர் நட்டி சொன்ன தகவல் !
விறுவிறுப்பான திரில்லர் கதை
மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.
சாதனை படைத்துள்ளது
முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான கைதி இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இப்பொழுது உலக சாதனையும் செய்துள்ளது. இதுவரை தமிழில் இருந்து எந்த ஒரு படமும் ரஷ்ய மொழியில் வெளியானதில்லை. தமிழ் சினிமா வரலாற்றிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் மட்டும் ரஷ்ய மொழியில் வெளியாகி சாதனை படைத்துள்ளது
விக்ரம்
விஜய் பலவிதமான ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் கல்லூரி ப்ரொஃபஸர் பாத்திரத்திலும் மாஸ் காட்ட முடியும் என லோகேஷ் கனகராஜ் நிரூபித்து காட்டியவர். விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் தொடர்ந்து இப்பொழுது லோகேஷ் கனகராஜ் கலையுலக குருவான நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷனில் தற்போது உருவாகியிருக்கும் விக்ரம் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது
ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன்
நடிகர் கமல்ஹாசனின் மிகத் தீவிரமான ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமலஹாசனின் எந்த ஒரு படத்தையும் விட்டு வைப்பதில்லை. கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விஸ்வரூபம் திரைப்படம் பல தடைகளை தாண்டி வெளியானது. விஸ்வரூபம் வெளியானபோது தமிழ்நாட்டில் வெளியாக தாமதமானது. இந்த நிலையில் கேரளாவிற்கு சென்று படம் பார்க்க போன லோகேஷ் கனகராஜ் அங்கு திரையரங்குகளில் நன்றாக இல்லை என உடனடியாக நண்பர்களுடன் பெங்களூருக்கு சென்று படத்தை பார்த்துள்ளார். அப்பொழுது ரொம்பவே எமோஷனலான லோகேஷ் கனகராஜ் முதல் சண்டைக்காட்சியில் தன்னையும் அறியாமல் பயங்கரமாக கத்தியுள்ளார். அப்பொழுது மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
Read more about: kamal haasan lokesh kangaraj vikram movie கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படம்
- AES and 5B accelerating transition to solar energy
- Ae Dil Hai Mushkil Turns 4: Karan Johar Calls It Celebration Of Love Even If It's 'Ek Tarfa'
- AES Vietnam and PV GAS Ink Term Sheet of the Joint Venture Agreement for Son My LNG terminal
கமல் ஸ்டண்ட் காட்சி பார்த்து மயங்கி விழுந்தேன்..இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!! have 111 words, post on tamil.filmibeat.com at May 25, 2022. This is cached page on Movie News. If you want remove this page, please contact us.